பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்..!

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்..!
பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று ஆபத்தான வலயங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் எதிர்வரும்  திங்கட் கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இதில் பாரிய ஆபத்து இருப்பதாக அகில இலங்கை மாவட்டப் பாடசாலை போக்குவரத்துச் சேவை சங்கத்தின் தலைவர் என்.எல்.கே. ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பரிந்துரையின் அடிப்படையில் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எமக்கு தேவையான சுகாதார நடைமுறைகளை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவை கிடைக்கப்பெற்ற பின்னர் சேவையை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் - Editor II