இன்றைய ராசி பலன்கள் 22-11-2020

இன்றைய ராசி பலன்கள் 22-11-2020
இன்று (நவம்பர் 22,2020)

சார்வரி வருடம், கார்த்திகை மாதம் 7 ஆம்திகதி, ரபியுல் ஆகிர் 6 ஆம் திகதி,
22.11.2020, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி, நள்ளிரவு 3:23 வரை,
அதன்பின் நவமி திதி, அவிட்டம் நட்சத்திரம் மாலை 4:13 வரை,
அதன்பின் சதயம் நட்சத்திரம், மரண - சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்

மேஷம்: அசுவினி: பகைவர் மாறுவர். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும்.
பரணி: முன்பு கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுப்பீர்கள்.
கார்த்திகை 1: தகுந்த ஓய்வெடுத்து உடல்நலத்தைச் சீராக்கிக் கொள்வீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: திடீர் செலவுகளைச் சமாளித்து வெற்றி அடைவீர்கள்.
ரோகிணி: பணியிடத்தில் கலகலப்பான சூழ்நிலை அமையும். நலம் கூடும்.
மிருகசீரிடம் 1,2: உங்களின் திறமை அதிகரிப்பதால் பிறர் பாராட்டுவார்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: பொறுமையை கடைப்பிடித்து பிரச்னை வராமல் காப்பீர்கள்.
திருவாதிரை: பிள்ளைகளின் திருமண முயற்சியில் சிறு தாமதம் ஏற்படும்.
புனர்பூசம்: 1,2,3: நம்பிக்கைகள் வெற்றி பெறும். சிலருக்கு பெருமை உண்டாகும்.

கடகம்: புனர்பூசம் 4: வம்புகளில் ஈடுபடாமல் இருந்து தப்பிக்க வேண்டிய நாள்
பூசம்: வீண் பழிகள் ஏற்படும்படியான சூழலுக்குள் செல்லவேண்டாம்.
ஆயில்யம்: முடிவடையாத பிரச்னைகள் கூட நல்ல முடிவிற்கு வரும்.

சிம்மம்: மகம்: மற்றவர் நலனில் அக்கறை கொண்டதற்கு பாராட்டு கிடைக்கும்.
பூரம்: புதிய முயற்சிகள் எடுப்போருக்கு உங்களின் ஆதரவை தெரிவிப்பீர்கள்.
உத்திரம் 1: மனம் மகிழும். பல காலம் கழித்துப் பாராட்டைப் பெறுவீர்கள்.

கன்னி: உத்திரம் 2,3,4: வியாபாரம் சூடுபிடிக்கும். பணிபுரியும் பெண்கள் மகிழ்வீர்கள்.
அஸ்தம்: முன்பு உடன் வேலை பார்த்த சிலரை சந்தித்து மகிழ்வீர்கள்.
சித்திரை 1,2: முன்னேற்றத்திற்கு உதவிய நண்பர்களுக்கு உதவுவீர்கள்.

துலாம்: சித்திரை 3,4: வரவேண்டிய செய்திகள் சற்றுத் தாமதமாகவே வந்து சேரும்.
சுவாதி: பணியாளர்கள் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகப் பேசுவீர்கள்.
விசாகம் 1,2,3: கவனக்குறைவு அறவே வேண்டாம். தர்மம் செய்வீர்கள்.

விருச்சிகம்: விசாகம் 4: பிறர் நலனுக்காகப் பாடுபட்டாலும் நற்பெயர் இப்போதைக்கு இல்லை.
அனுஷம்: வீண் பழி வராதவாறு நடந்து கொள்வீர்கள். மனம் நிறையும்
கேட்டை: பல காலம் மனதுக்குள் இருந்த கனவு நனவாக ஆரம்பிக்கும்.

தனுசு: மூலம்: சில நாளாக மனதை அரித்த மனக்குழப்பம் அகலும் நாள்.
பூராடம்: சக பணியாளர்களால் ஏற்பட்டிருந்த பிரச்னைகள் அகலும்.
உத்திராடம் 1: புதுத்தொழில் துவங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: கடன் சுமை குறையும். நட்பால் நல்ல விஷயம் நடக்கும்.
திருவோணம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறுவதற்கான அறிகுறி உண்டு.
அவிட்டம் 1,2: உள்ளம் மகிழும்படியான செய்தியொன்றைக் கேட்பீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3,4: திடீர் செலவுகளை சமாளிக்க புதிய வழியை கண்டுபிடிப்பீர்கள்.
சதயம்: தகுந்த ஓய்வுபெற்று உடல்நலத்தைச் சீராக்கிக் கொள்வீர்கள்.
பூரட்டாதி 1,2,3: பெண்கள் பொறுமையைக் கடைப்பிடித்து நன்மை காண்பீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4: பழி தரும் செயல்களைச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உத்திரட்டாதி: மன வைராக்கியத்தோடு செயல்பட்டு நன்மை காண்பீர்கள்.
ரேவதி: வீடு வாங்க அல்லது விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
ஆசிரியர் - Editor II