12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..!

12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..!
12 ஆண்டுகளாக பின்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, தனது அடைத்து வைத்திருந்த சுவிஸ் பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்..,

சுவிட்சர்லாந்தில் Lugano மாகாணத்தில் வாழும் அந்த 80 வயது பாதிரியார், அந்த 48 வயது பெண்ணை வீட்டு வேலைக்காக முதலில் நியமித்துள்ளார். அதன் பின், அவரை 12 ஆண்டுகளாக தன் வீட்டுக்குள் அவர் அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு, அவர்கள் இருவருக்கும் இடையில் என்ன உறவு என்று தெரியவில்லை. கைது செய்யப்பட்ட அவர் மீது, கடத்தல், கட்டாயப்படுத்துதல், கடமை மீறுதல் மற்றும் உடல் மீது லேசான காயம் ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், பாதிரியார் ஒருவர், பெண் ஒருவரை 12 ஆண்டுகளாக தன் வீட்டில் அடைத்து வைத்திருந்த விடயம், அவர் சார்ந்த திருச்சபையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் - Editor II