இன்றைய ராசி பலன்கள் 25-11-2020

இன்றைய ராசி பலன்கள் 25-11-2020
இன்று (நவம்பர் 25,2020)

சார்வரி வருடம், கார்த்திகை மாதம் 10 ஆம் திகதி, ரபியுல் ஆகிர் 9 ஆம் திகதி,
25.11.2020, புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி முழுவதும்,
உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 9:28 வரை,
அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்த - மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : மகம், பூரம்
பொது : விஷ்ணு வழிபாடு, கரிநாள்.

மேஷம்: அசுவினி: புதிய முயற்சிகளில் தாமதமாகவே வெற்றி கிடைக்கும்.
பரணி: பணியிட மாற்றத்திற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை.
கார்த்திகை 1: உத்யோகஸ்தர்கள் பணிவாக இருப்பதால் நற்பெயர் கிடைக்கும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: குழந்தைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள்.
ரோகிணி: கட்டுப்பாடுகள் காரணமாக எரிச்சல் அடைய வேண்டாம்.
மிருகசீரிடம் 1,2: வெளிநாடு செல்ல முயல்பவர்கள் வெற்றியடைவார்கள்

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: உங்களது புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
திருவாதிரை: விரயங்கள் அதிகரிக்கும். எதையும் எளிதில் முடிப்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: கடந்த நாளில் இருந்து வந்த மன உளைச்சல் நீங்கும்.

கடகம்: புனர்பூசம் 4: விரயங்கள் அதிகரிக்கும்.. எந்த விஷயமும் எளிதில் முடியும்.
பூசம்: திடீர் திருப்பம் ஏற்படும். சந்திக்க விரும்பிய நபரைச் சந்திப்பீர்கள்.
ஆயில்யம்: சுப நிகழ்ச்சிகள் பற்றிய முயற்சியில் உடனடிப் பலன் ஏற்படும்.

சிம்மம்: மகம்: எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். வீண் பேச்சு வேண்டாம்.
பூரம்: தன்னம்பிக்கையும், தைரியமும் குறையாமல் கவனமாக இருங்கள்.
உத்திரம் 1: வெளிநாட்டிலுள்ள உறவினர் மூலம் நற்செய்தி தேடி வரும்

கன்னி: உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த லாபம் வரும், பிரியமானவர்கள் பாராட்டுவர்.
அஸ்தம்: வீட்டில் கடன் சுமையை குறைக்க பொறுப்புடன் பாடுபடுவீர்கள்.
சித்திரை 1,2: எதிரிகள் விலகிச் செல்வதற்கான முயற்சிகளை செய்வீர்கள்.

துலாம்: சித்திரை 3,4: ஒற்றுமை காரணமாக குடும்பத்தில் குதுாகலம் அதிகரிக்கும்.
சுவாதி: எந்த விஷயத்தையும் மிகுந்த முனைப்புடன் செய்து முடிப்பீர்கள்
விசாகம் 1,2,3: தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். கடன் தீரும்.

விருச்சிகம்: விசாகம் 4: மனதில் மகிழ்ச்சி கூடும். விலை உயர்ந்த நகை வாங்குவீர்கள்.
அனுஷம்: காதலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உண்டு.
கேட்டை: விடாமுயற்சியால் வெற்றி கிடைக்கும். இளைஞர்கள் வெல்வர்.

தனுசு: மூலம்: கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.
பூராடம்: அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். புதிய விஷயம் கற்பீர்கள்.
உத்திராடம் 1: எடுத்த முயற்சியை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள்

மகரம்: உத்திராடம் 2,3,4: சுற்றியிருந்த பகைவர்கள் மெல்ல மனம் மாறுவார்கள்.
திருவோணம்: சக ஊழியர்களின் ஆதரவை உதாசீனம் செய்ய வேண்டாம்.
அவிட்டம் 1,2: மன உளைச்சல் நீங்கி மகிழ்ச்சி நிலவும். சுப நிகழ்வு உண்டு.

கும்பம்: அவிட்டம் 3,4: தனிப்பட்ட விஷயங்களை யாரையும் நம்பிப் பகிர வேண்டாம்
சதயம்: முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்
பூரட்டாதி 1,2,3: வெளியூரில் இருக்கும் பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள்.

மீனம்: பூரட்டாதி 4: மதிப்பும், மரியாதையும் உயரும். பெண்களின் சிக்கல்கள் தீரும்.
உத்திரட்டாதி: பேச்சை குறைத்து செயலில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
ரேவதி: பொறுமை இழந்து மற்றவர்களிடம் கடுமையாகப் பேச வேண்டாம்.
ஆசிரியர் - Editor II