மாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..!

மாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..!
தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகை ரகுல் பிரீத் சிங், மாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்.

"என்னமோ ஏதோ", "தீரன் அதிகாரம் ஒன்று", "தேவ்" உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்தவர், ரகுல் பிரீத் சிங். மேலும், தற்போது சிவகார்த்தியேன் நடிக்கும் "அயலான்", ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் "இந்தியன் 2" படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஹாலிடேவுக்காக மாலத்தீவு சென்றிருக்கிறார், ரகுல் பிரீத் சிங். அங்கிருந்து தினமும் சில புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்தவகையில், மாலத்தீவில் பெற்றோரின் 31வது திருமண நாளை கொண்டாடியிருக்கிறார் ரகுல் பிரீத் சிங். இதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
ஆசிரியர் - Editor II