மகனால் தாக்கப்பட்ட தந்தை மருத்துவமனையில் அனுமதி..!

மகனால் தாக்கப்பட்ட தந்தை மருத்துவமனையில் அனுமதி..!
மூத்த மகன் மற்றும் அவரது நண்பர்களினால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த நபர் ஒருவர், இன்று (25) காலை மீகஹகிவுல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்த நபர் பின்னகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை தனது 19 வயது மகன் உள்ளிட்ட அவரது நண்பர்களுடன் பணிபுரிந்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபரும் இதுவரையில் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ரிதிமாலியத்த காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
ஆசிரியர் - Editor II