திருத்தணி கோயிலுக்குள் 15 அடி பள்ளம் தோண்டிய மர்ம நபர்கள் : மறைந்திருந்த ஊர்மக்கள் செய்த காரியம்..!

திருத்தணி கோயிலுக்குள் 15 அடி பள்ளம் தோண்டிய மர்ம நபர்கள் : மறைந்திருந்த ஊர்மக்கள் செய்த காரியம்..!
திருத்தணியில் கோவிலுக்கு சொந்தமான மண்டபத்தில் மர்ம நபர்கள் புதையலுக்காக்க 15 அடி பள்ளம் தோண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி ஒன்றியம் அகூர் பஞ்சாயத்து கிராம மக்கள் காலம்காலமாக பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் உற்சவர் முருகப்பெருமானை சுமந்து கொண்டு வருடத்திற்கு ஒரு முறை பஞ்சாயத்தில் உள்ள ரெட்டி குளம் மண்டபத்தில் வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

இந்த பழமையான மண்டபத்தில் வருடத்திற்கு ஒரு முறை தான் நிகழ்ச்சி நடக்கும் என்பதால் யாரும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு சென்று ஏதோ செய்து கொண்டிருந்துள்ளனர். இதைக் கவனித்த ஊர் மக்கள் சிலர் நேற்று முன்தினம் நள்ளிரவு மண்டபம் இருக்கும் பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.

அப்போது மர்ம நபர்கள் 3 பேர் மண்டபத்தின் நடுப்பகுதியில் புதையல் இருப்பதாக நினைத்து மையப்பகுதிக்கு ஓரமாக 15 அடிக்கு ஆழம் தோண்டியுள்ளனர். இதை மறைந்திருந்து பார்த்த ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த மர்ம நபர்களை பிடிப்பதற்கு முயற்சியும் செய்துள்ளனர்.

கிராம மக்கள் வருவதை கண்ட 3 மர்ம நபர்களில் இருவர் விழுந்து அடித்துக் கொண்டு ஒடியுள்ளனர். இதில் சிக்கிய ஒருவர் ஊர் மக்களிடம் குடிபோதையில்  ஏதேதோ உளறுவதை பார்த்த மக்கள், உடனடியாக திருத்தணி காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி பொலிசார் பிடிபட்ட மர்ம நபரை திருத்தணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் பூண்டி பகுதியை சேர்ந்த 45 வயதான பாபு என (கட்டிட தொழிலாளி) என தெரியவந்தது. மேலும் தப்பித்து சென்றவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆசிரியர் - Editor II