இன்றைய ராசி பலன்கள் 27-11-2020

இன்றைய ராசி பலன்கள் 27-11-2020
இன்று (நவம்பர் 27,2020)

சார்வரி வருடம், கார்த்திகை மாதம் 12 ஆம் திகதி, ரபியுல் ஆகிர் 11 ஆம் திகதி,
27.11.2020, வெள்ளிக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி காலை 9:41 வரை,
அதன்பின் திரயோதசி திதி, அசுவினி நட்சத்திரம் நள்ளிரவு 2:27 வரை,
அதன்பின் பரணி நட்சத்திரம், அமிர்த - சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அஸ்தம்.
பொது : பிரதோஷம்

மேஷம்: அசுவினி: எதிரிகளாக இருந்தவர்கள் திடீரென்று நண்பர்களாக மாறுவர்.
பரணி: வழிபாட்டால் வளர்ச்சி காண்பீர்கள். மன தைரியம் கூடும்.
கார்த்திகை 1: உடல்நலம் சீராகும். பயமுறுத்தியவர்கள் விலகுவார்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: திட்டமிட்ட விஷயம் நடக்காது. திட்டமிடாத நன்மை நிகழும்.
ரோகிணி: உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. யோகமான நாள். பகை தீரும்.
மிருகசீரிடம் 1,2: மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். நலம் கூடும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணம் வரும்.
திருவாதிரை: பணவரவு ஓரளவுதான் சிறப்பாக இருக்கும். பிரச்னை தீரும்.
புனர்பூசம் 1,2,3: பிறந்தவர்களால் உதவிகள் எதிர்பார்த்த அளவு இருக்காது.

கடகம்: புனர்பூசம் 4: நேற்றிருந்த பணத்தேவைகள் கடைசி நேரத்தில் நிறைவேறும்.
பூசம்: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். சிறு பிரச்னைகள் ஏற்படும்.
ஆயில்யம்: இளைஞர்களின் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்: மகம்: பிள்ளைகளின் உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சினை நீங்கி பயம் தீரும்.
பூரம்: சிலருக்கு பொருளாதார நெருக்கடியால் சற்று பாதிப்பு ஏற்படலாம்.
உத்திரம் 1: உறவினர் ஒருவர் பற்றிய கவலை அளிக்கும் செய்தி வரும்.

கன்னி: உத்திரம் 2,3,4: மறதியால் சிறு சிறு பிரச்னைகளுக்கு ஆட்பட நேரிடும்.
அஸ்தம்: விரயம் கூடும். பிரியமானவரிடம் யோசித்து பேசும் நிலை வரும்.
சித்திரை 1,2: நட்பால் நல்ல விஷயம் நடைபெறும். அலைச்சல் உண்டு.

துலாம்: சித்திரை 3,4: வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரும்.
சுவாதி: விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து நல்லபடியாக முடியும்.
விசாகம் 1,2,3: தொழில் வளர்ச்சி உண்டு. நிதி நிலை திருப்தி தரும்.

விருச்சிகம்: விசாகம் 4: குடும்பத்தினருக்கு வெளி ஆட்களால் வீண் பிரச்னை ஏற்படக்கூடும்
அனுஷம்: எதிரிகள் பலமிழப்பதால் வளமும், நன்மையும் கூடுதலாகும்.
கேட்டை: மனம் நிறையும். எடுத்த வேலைகளை எளிதில் முடிப்பீர்கள்.

தனுசு: மூலம்: உடல்நலம் சிறப்பாக இருக்கும். வியாபார விருத்தி உண்டு.
பூராடம்: மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.
உத்திராடம் 1: நினைத்ததை முடித்து நிம்மதி காண்பீர்கள். வளம் கூடும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: பூர்வீக சொத்தால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கவலை நீங்கும்.
திருவோணம்: சேமிப்பை உயர்த்தும் எண்ணம் வரும். பயம் உண்டாகும்.
அவிட்டம் 1,2: வருங்கால நலனுக்காக செய்த செயல்கள் விரிவடையும்.

கும்பம்: அவிட்டம் 3,4: புதிதாக சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள்.
சதயம்: குழந்தைகளின் எதிர்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: பயணங்கள் பலன் தருவதாக அமையும். நிதி நிலை உயரும்.

மீனம்: பூரட்டாதி 4: பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக ஆர்வம் கொள்வீர்கள்.
உத்திரட்டாதி: நெருங்கியவருடன் ஏற்பட்ட பகையைத் தீர்க்க முயலுங்கள்.
ரேவதி: நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்று நன்கு முன்னேறுவீர்கள்.
ஆசிரியர் - Editor II