பிக்பாஸில் இருந்து டம்மி பீஸ்களை சீக்கிரம் எலிமினேட் பண்ணுங்கள் : கோபத்தில் நடிகர் பரத்..!

பிக்பாஸில் இருந்து டம்மி பீஸ்களை சீக்கிரம் எலிமினேட் பண்ணுங்கள் : கோபத்தில் நடிகர் பரத்..!
கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, பிரபல தமிழ் தொலைக்காட்சியில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும், "பிக் பாஸ்" சீசன் 4 ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் பரபரப்பும் சண்டையும் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது.

இந்நிலையில், தற்போதுள்ள போட்டியாளர்களில் பாலா, சனம், அனிதா, ஆரி, ரம்யா ஆகியோர்தான் தேவையான அளவும், அளவுக்கு மீறியும் பேசுகிறார்கள். 

அர்ச்சனா ஒரு குழுவை அமைத்துக் கொண்டு ரியோ, நிஷா, சோம், கேபி, ஜித்தன் ரமேஷ் ஆகியோரை "அன்பு" என்று சொல்லி அடக்கி வைத்துள்ளார். 

சம்யுக்தா, பாலா, ஆஜித், ஷிவானி ஆகியோர் மற்றொரு குழுவாக செயல்படுகிறார்கள். நிஷா, சோம், ஜித்தன் ரமேஷ், கேபி, ஆஜித், ஷிவானி ஆகியோர் எந்த தனித்தன்மையும் இல்லாமல் குழுவில் கலந்து இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள். 

ஆனாலும், மிகப் பெரிய சண்டை என்று எந்த காரசாரமான விவாதமும் நிகழ்ச்சியில் இதுவரையிலும் நடக்கவில்லை.

சில சினிமா பிரபலங்களும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நடிகர் பரத். நேற்றைய நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு மிகவும் கோபமடைந்து போயிருப்பார் போலிருக்கிறது.

"பிக் பாஸில் இருந்து அனைத்து டம்மி பீஸ்களையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எலிமினேட் பண்ணுங்கள், அவர்களிடமிருந்து எந்த கன்டென்ட்டையும் நான் பார்க்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

பரத்தின் பதிவைப் பார்த்து நடிகர் பிரேம்ஷி "நாம் வேண்டுமானால் உள்ளே போகலாமா," எனக் கேட்டுள்ளார். 

"உங்களுக்கு விருப்பமா..?" என பதிலுக்கு பரத் கேட்க, "உங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஓகே" என பிரேம்ஜி பதிலளித்துள்ளார்.
ஆசிரியர் - Editor II