ஷானி அபேசேகரவுக்கு பிணை வழங்குவது தொடர்பில் கம்பஹா மேல் நீதிமன்றில் கடும் வாதப் பிரதிவாதம்..!

ஷானி அபேசேகரவுக்கு பிணை வழங்குவது தொடர்பில் கம்பஹா மேல் நீதிமன்றில் கடும் வாதப் பிரதிவாதம்..!
முன்னாள் சி.ஐ.டி பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவுக்கு பிணையளிப்பதா.. இல்லையா..? என, எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்படவுள்ளது. 

முன்னாள் சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானி அபேசேகர, உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோரின் பிணை மனுக்கள், கம்பஹா மேல் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு வந்த போதே நீதிபதி நிமல் ரணவீர இதனை அறிவித்தார்.

கடந்த 4 மாதங்களாக விளக்கமரியலில் உள்ள ஷானி அபேசேகர மற்றும் சுதத் மெண்டிஸ் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள ஆகியோர் முன்வைத்த வாதங்கள் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஷனில் குலரத்ன முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர் நீதிபதி இதனை அறிவித்தார்.
ஆசிரியர் - Editor II