7 மாத கர்ப்பம் - மருத்துவமனைக்குச் சென்றவேளை காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் : மருத்துவர்கள் மீது நடவடிக்கை..!

7 மாத கர்ப்பம் - மருத்துவமனைக்குச் சென்றவேளை காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் : மருத்துவர்கள் மீது நடவடிக்கை..!
தமிழகத்தில், நீர்க்கட்டியால் அவதிப்பட்ட பெண்ணை கர்ப்பமாக இருப்பதாக கூறி சிகிச்சையளித்து வந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சந்திரப்பட்டியை சேர்ந்தவர் வேடியப்பன், இவரது மனைவி அஸ்வினி. கடந்த மார்ச் மாதம் அஸ்வினி அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார், அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இதைக் கேட்ட தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், இந்நிலையில் கடந்த 7 மாதங்களாக அஸ்வினிக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 19ம் திகதி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட அஸ்வினி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அங்கே அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, கர்ப்பமாக இல்லை என்பதும், நீர்க்கட்டி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து குறித்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கேட்டதற்கு, தெரியாமல் தவறு நடந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

இதனைதொடர்ந்து அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அஸ்வினியின் உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆசிரியர் - Editor II