யாழ். போதனா வைத்தியசாலை பிசிஆர் சோதனை : 23 பேருக்கு தொற்று உறுதி..!

யாழ். போதனா வைத்தியசாலை பிசிஆர் சோதனை : 23 பேருக்கு தொற்று உறுதி..!
யாழ். போதனா வைத்தியசாலை பரிசோதனைக் கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 23 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதாவது, யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி, நாளாந்தம் வெளியிடுகின்ற அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் நேற்று, யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடங்ளில் 352 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

வவுனியா, பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த 20 பேருக்கும், யாழ்ப்பாணம் கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய 329 பேருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஆசிரியர் - Editor II