பிரபாகரனின் வீரத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த நால்வர் கைது..!

மாவீரர் தின அனுஷ்டிப்பிற்கு நீதிமன்றங்களால் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரத்தை போற்றும் வகையில் சமூக வலைத்தளங்களில் தகவல்களைப் பதிவேற்றம் செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் வைத்து இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கலடி பகுதியை சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.