ஜப்பானிலிருந்து கடத்தி வரப்பட்ட சிறுமி 5 மாதம் கர்ப்பிணி : இளைஞன் விளக்கமறியலில்..!

ஜப்பானிலிருந்து கடத்தி வரப்பட்ட சிறுமி 5 மாதம் கர்ப்பிணி : இளைஞன் விளக்கமறியலில்..!
ஜப்பானிலிருந்து 15 வயதுடைய சிறுமியை இலங்கைக்கு கடத்தி வந்து மறைந்திருந்த நிலையில், அச்சிறுமி 5 மாதம் கர்ப்பிணியாக இருக்கும் விடயம் தெரிய வந்துள்ளது.

அந்தவகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் மகளான சிறுமியை, இலங்கைக்கு அழைத்து வந்து திருமணம் செய்த இலங்கை இளைஞன் எதிர்வரும் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிலாபம் மாரவில மூதுகொட்டுவ பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அத்துடன் குறித்த சிறுமியை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்புமாறும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், குறித்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களையும் பிணையில் விடுதலை செய்யவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். 
ஆசிரியர் - Editor II