சுவீடன் நாட்டின் இளவரசர் - இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதி..!

சுவீடன் நாட்டின் இளவரசர் - இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதி..!
சுவீடன் நாட்டின் இளவரசர், கார்ல் பிலிப் மற்றும் அவரது மனைவி இளவரசி சோபியா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுவீடன் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

எனினும் அவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ள நிலையில் மன்னர், ராணி மற்றும் பட்டத்து இளவரசி விக்டோரியா உட்பட அரச குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராணியின் சகோதரரின் இறுதிச்சடங்குகளில் அரச குடும்பத்தினர் அனைவரும் கலந்துக்கொண்ட நிலையில், அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இறுதி சடங்கில் கலந்து கொண்ட மற்றவர்கள் அனைவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இளவரசர் கார்ல் பிலிப், இளவரசி சோபியா ஸ்டொக்ஹோமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, இளவரசி சோபியா கொரோனா வைரஸ் தொற்றுநோயை சுவீடனில் கட்டுப்படுத்த போராடுவதற்கு உதவுவதற்காக வைத்தியசாலையில் மருத்துவ பணியாளராக பணியாற்றியிருந்தார்.

மேலும், சுவீடன் நாட்டில் இதுவைர கொரோனா தொற்றினால் 236,355 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 6,622 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II