விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் செய்ய மிகப்பெரிய பிளான் செய்த படக்குழு..?

விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் செய்ய மிகப்பெரிய பிளான் செய்த படக்குழு..?

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து என்னவொரு தகவல் வெளிவந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது ஆர்வம் அதிகரித்துள்ளது .இந்நிலையில் மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாகப் போவதாக கடந்த வாரம் பேச்சு கிளம்பியது. இதை பார்த்த மாஸ்டர் படக்குழுவோ, அந்த தகவலில் உண்மை இல்லை என்று விளக்கம் அளித்தது. மேலும் மாஸ்டர் படம் கண்டிப்பாக தியேட்டர்களில் தான் ரிலீஸாகும். அந்த பெரிய நாளுக்காக உங்களை போன்றே நாங்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றது.athவிஜய் ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள்.

மாஸ்டர் படத்தை பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்ய திட்டமிடுகிறார்கள். பொங்கல் கொண்டாட்டம் ஜனவரி 14ம் தேதி வியாழக்கிழமை முதல் துவங்கும். மாஸ்டரை ஜனவரி 13ம் தேதி புதன்கிழமை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.

புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என்று தொடர்ந்து 5 நாட்கள் மாஸ்டர் வசூல் வேட்டை நடத்துவார் போன்று. அனிருத் இசையமத்துள்ள மாஸ்டர் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டன.

தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக மாஸ்டர் பட டீஸர் வெளியானது. இதையடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ட்ரெய்லர் வெளியாக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். டீஸர், ட்ரெய்லர் எல்லாம் ஏற்கனவே தயாராக இருப்பதாக லோகேஷ் கனகராஜ் முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II