சைக்கிளில் சென்ற பிரபல தமிழ் ஹீரோவிடம் இருந்து செல்போனை பறித்த மர்ம நபர்கள்…!பெரும் பரபரப்பு

சைக்கிளில் சென்ற பிரபல தமிழ் ஹீரோவிடம் இருந்து செல்போனை பறித்த மர்ம நபர்கள்…!பெரும் பரபரப்பு

கடல், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கவுதம் கார்த்திக் சிம்புவுடன் இணைந்து முஃப்தி தமிழ் ரீமேக், எழில் இயக்கத்தில் பார்த்திபனுடன் இணைந்து ஒரு படம் உட்பட ஒரு சில புதிய படங்களில் நடித்து வருகிறார்.தினமும் அதிகாலை தனது ஸ்மார்ட் சைக்கிள் மூலம் சைக்கிளிங் பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்ட கவுதம் கார்த்திக், இன்று அதிகாலை மெரினா வழியாக கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிளிங் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். ராதாகிருஷ்ணன் சாலை – டி.டி.கே சாலை சந்திப்பில் தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது அவரை வழிமறித்த செல்போன் திருடர்கள் அவரிடம் வழிபறி செய்ய மிரட்டியுள்ளனர்.


அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற நடிகர் கவுதம் கார்த்திக்கை கீழே தள்ளி அவரது கையில் பேண்டு மூலம் சுற்றப்பட்டிருந்த சாம்சங் ரக விலையுர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இதையடுத்து தகவலறிந்து வந்த மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர். செல்போன் திருடர்களை பிடிக்க மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், வழிபறி கொள்ளையர்கள் கீழே தள்ளி தாக்கியதில் லேசான காயமடைந்த கவுதம் கார்த்திக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்

ஆசிரியர் - Editor II