உலர் சருமத்தில் இருந்து விடுபட வேண்டுமா??

உலர் சருமத்தில் இருந்து விடுபட வேண்டுமா??

பொதுவாக பெண்கள் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை உலர் சரும பிரச்சினை.

ஏனெனில் உலர் சருமம் கொண்டவர்கள், அவர்தம் சருமத்தை பேணிக் காப்பது மிகவும் கடினமாகும்.

இதற்காக கடைகளில் கிடைக்கும் கிறீம்கள், மாய்ஸ்சரைஸ்கள் போன்ற கண்ட கண்ட தரமற்ற தயாரிப்புகளை வாங்கிப்பயன்படுத்துகின்றார்கள்.

உண்மையில் இதனால் எந்தபயனும் இல்லை. இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எளிய முறையில் கூட இது மாதிரியான பிரச்சினையிலிருந்து விடுபடலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • சருமம் மீது கொஞ்சம் ஆலிவ் ஆயில் தடவிக்கொண்டு அதை பின்னர் ஈரத் துணியால் துடைக்கவும். இதன் பிறகு சருமம் பொலிவு பெறுவதையும், ஜொலிப்பதையும் பார்க்கலாம்.
  • பாதி அவகாடோ எடுத்துக்கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். பின் இந்த கலவையை முகத்தில் தடவிக்கொண்டு 20 நிமிடங்கள் உலர வைக்கவும். இது சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்து மின்ன வைக்கும்.
  • தூங்குவதற்கும் முன் சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்வது. தேங்காய் எண்ணெய் அறை வெப்ப நிலையில் அடர்த்தியாகிவிடுவதால் இது மிகச்சிறந்த மாய்ஸ்சரைசிங் கிரீமாக அமையும்.
  • பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதாலும் புண்களை எதிர்க்கும் தன்மை இருப்பதாலும் முகத்தில் பால் தடவிக்கொள்வது, உங்கள் சருமம் பாதிப்படைவதில் இருந்து காக்கும்.
  • சூரிய ஒளி பாதிப்பு அல்லது சருமத்தில் வெடிப்பு இருந்தால் ஆலோவேரா ஜெல்லைப் பயன்படுத்தலாம். முகத்தை சூடான நீரில் அல்லாமல் வெதுவெதுப்பான நீரில் கழுவிக்கொள்ளவும். நிறைய தண்ணீர் குடிக்கவும். நிறைய தண்ணீர் குடிப்பது அதிகமாக வியர்வை வெளியேற வைத்து சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும்.
ஆசிரியர் - Editor II