யாழில் ஆலய விக்கிரகத்திற்கு மலக்கழிவு வீசிய விசமி!

யாழில் ஆலய விக்கிரகத்திற்கு மலக்கழிவு வீசிய விசமி!

யாழ்ப்பாணத்தில் வைரவர் ஆலய விக்கிரகத்திற்கு விசமிகள் மலக்கழிவு வீசியுள்ளனர்.

சுண்டுக்குழி, மூளாய் ஒழுங்கையிலுள்ள சாமுண்டியா ஞானவைரவர் ஆலய விக்கிரகத்திற்கே மனித மலம் வீசப்பட்டுள்ளது.

நேற்று இந்த சம்பவம் நடந்தது.

கிராம அலுவலர் ஒருவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருப்பதாக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. மனித மலம் வீசியதை நேரில் கண்டதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இந்த ஆலயத்தை சிலர் இடித்திருந்தனர். இதையடுத்து யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் ஆராயப்பட்டு, ஆலயத்தை அகற்றும் நடவடிக்கைக்கு தடைவிதிக்கப்பட்டது. பொதுமக்கள் வழிபாட்டில் ஈடுபட எந்த தடையுமில்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மனித மலம் வீசப்பட்டது.

ஆசிரியர் - Editor II