நிலுவையிலுள்ள வழக்குகளின் விசாரணையைத் துரிதப்படுத்த நடவடிக்கை : நீதி அமைச்சர்!

நிலுவையிலுள்ள வழக்குகளின் விசாரணையைத் துரிதப்படுத்த நடவடிக்கை : நீதி அமைச்சர்!

20 வருடங்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்குகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 620 ஆக காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த நீதி அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.

இதன்படி, 1 முதல் 5 வருடங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்குகளின் எண்ணிக்கை, 49 ஆயிரத்து 801 ஆகவும், 5 முதல் 10 வருடங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்குகளின் எண்ணிக்கை, 20 ஆயிரத்து 586 ஆகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், 10 முதல் 15 வருடங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்குகளின் எண்ணிக்கை, 8 ஆயிரத்து 947 ஆகவும், 15 முதல் 20 வருடங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்குகளின் எண்ணிக்கை, 3 ஆயிரத்து 418 ஆகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாவட்ட நீதிமன்றங்களில் குறித்த வழக்குகள் நிலுவையில் காணப்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த அரசாங்கத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளில் தேவையற்ற செல்வாக்கு காணப்படாது எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II