வீட்டுக்குள் அடைபட்ட மக்கள்; இரத்தம் உறையும் பெரும் ஆபத்து வெளியே!

வீட்டுக்குள் அடைபட்ட மக்கள்; இரத்தம் உறையும் பெரும் ஆபத்து வெளியே!

கனடாவில் தற்போது கடுமையான பனிப்பொழிவு இடம்பெற்றுவருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கனடாவின் சுற்றுச் சூழல் அமைப்பு ஏற்கனவே எதிர்வுகூறியதன்படி, நேற்று திங்கட்கிழமை முதல் நாளை புதன்கிழமை வரை வாட்டர்லூ பிராந்தியத்திலும் குயெல்ப் பகுதியிலும் 20 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் வடக்கு வெலிங்டன் கவுண்டியில் 30 சென்டிமீட்டர் வரை இந்த பனிப்பொழிவின் குவிப்பு (accumulation) நிகழுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பனிப்பொழிவு காரணமாக தொலைதூர பள்ளிகளுக்கான போக்குவரத்து பேருந்துகளும் ரத்தாகியுள்ளன.

நேற்று திங்கள்கிழமை காலை நிலவரப்படி, தெற்கு ஒன்ராறியோவின் பெரும்பகுதிக்கு கனடாவின் வானிலை அலுவலகம் ஒரு சிறப்பு வானிலை அறிக்கையை வெளியிட்டது, அந்த அறிக்கையில் “பல நாட்கள் பனிப்பொழிவு நிகழ்வு ஏற்படும்” என்று எச்சரிக்கிறது.

குயெல்ப் மற்றும் வாட்டர்லூ பிராந்தியத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலைக்குள் தரையில் 10 செ.மீ வரை பனியைக் காண முடிந்தது. வடக்கு வெலிங்டன் கவுண்டியில் 15 செ.மீ வரை காண முடிந்தது என்று கனடாவின் ஊடகங்கள் மேலும் கூறியுள்ளன.

இதேவேளை கனடாவிலுள்ள புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களின் கருத்துப்படி, என்றுமில்லாதவாறு மிக மோசமான ஒரு பனிப்பொழிவை தாம் சந்தித்துள்ளதாகவும் இவ்வாறான ஒரு கால நிலையில் வாழ்தல் என்பது மிகக் கடினமானதென்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஆசிரியர் - Editor II