இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா மருந்து – ஜனாதிபதி பரிசோதனைக்கு அனுசரணை

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா மருந்து – ஜனாதிபதி பரிசோதனைக்கு அனுசரணை

கேகாலை பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் ஒருவரால் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்திற்காக, அரச அனுசரணை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார்.

கேகாலைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியரான தம்மிக்க பண்டாரவினால் கொரோனா தொற்றுக்கான ஒழிப்புக்கான மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்து தொடர்பிலான பரிசோதனைகளை நடத்தும் பொறுப்பு, ஓளடத உற்பத்தி இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமனவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி நேற்று செவ்வாய்க்கிழமை கூடிய வேளையிலேயே அதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

வத்துபிட்டிவல கொரோனா தொற்று சிகிச்சை மத்திய நிலையத்தில் இந்த மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றாளர் ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டு, தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு இந்த மருந்தை வழங்குவதன் ஊடாக, குறித்த வைரஸ் உடலில் இருந்து முழுமையாக இல்லாது போகின்றமை முதலாவது மற்றும் இரண்டாவது பரிசோதனைகளின் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த பின்னணியிலேயே, மூன்றாவது பரிசோதனைக்கு அரச அனுசரணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II