மன்னார் எல்லையில் புரேவி! வெளியான முக்கிய தகவல்

மன்னார் எல்லையில் புரேவி! வெளியான முக்கிய தகவல்

வங்காள விரிகுடாவில் உருவாகி முல்லைத்தீவுக்கு தெற்காக வடக்கு மாகாணத்திற்குள் நிலப்பகுதிக்குள் நகர்ந்த புரேவி புயலானது மன்னார் மாவட்டத்தின் வடக்குப் பகுதிக்கும் கிளிநொச்சி மாவட்டத்தின் தெற்குப்பகுதிக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பகுதிக்கும் இடையில் நிலப்பகுதியில் காணப்படுகின்றது.

காலை 6.30 மணியளவில் இந்த நிலைமை காணப்பட்டதாக யாழ்ப்பாண பல்கலைகழக புவியில்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்தார்.

வலுக்குறைந்த நிலையில் (மையப்பகுதியின் வளியமுக்கம் 1003mb) காணப்படும் புரேவி புயலானது இன்னும் சிலமணி நேரங்களின் பின்னரே முழுமையாக நிலப்பகுதியை விட்டு அரபிக்கடலில் நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆசிரியர் - Editor II