கிளிநொச்சியில் பாரிய அபாயங்களின்றி நிலைமை சீருக்கு வந்தது!

கிளிநொச்சியில் பாரிய அபாயங்களின்றி நிலைமை சீருக்கு வந்தது!

கிளிநொச்சியில் பாரிய பாதிப்பு ஏற்படாத வகையில் புயலின் தாக்கம் சீருக்கு வந்துள்ளதாக மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ஆயினும் புயலுக்கு பின்னர் கிடைக்கும் மழை வீழ்ச்சி காரணமாக குளங்களின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம்
தெரிவிக்கின்றது.

36 அடி கொண்ட இரணைமடு குளம் 20 அடியாக உயர்த்துள்ளது. கனகாம்பிகைகுளம் 9′ அடியை எட்டியுள்ளதுடன் இன்று வான்பாய ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடமுருட்டிகுளம் 7.11 அடியாக உயர்ந்து வான் மட்டத்தை அடைகிறது. 26 அடி கொண்ட கல்மடு குளம் 14.5 அடியாகவும், 12 அடி கொள்ளளவு கொண்ட பிரமந்தனாறு குளம் 6 அடியாகவும் உயர்ந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை தொடர்வதால் பூநகரியில் உள்ள மீனவர்களை அவதானத்துடன் செயல்படுமாறு மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor II