புரெவி புயல் காரணமாக வவுனியாவில் 67 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு

புரெவி புயல் காரணமாக வவுனியாவில் 67 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு

புரெவி புயல் தாக்கம் காரணமாக வவுனியா வடக்கில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புரெவி புயல் நள்ளிரவு வவுனியாவைக் கடந்தது. இதன் காரணமாக நேற்று காலையிலிருந்து வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் புரெவி புயல் தாக்கத்தின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்கள் மற்றும் சொத்தழிவுகளை தடுக்கும் வகையில் மாவட்ட செயலகத்துடன் இணைந்து வவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

இதனடிப்படையில் அனர்த்தம் நிகழக் கூடிய தற்காலிக வீடுகள் மற்றும் பாதுகாப்பற்ற வீடுகளில் தங்கியிருந்த 67 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor II