யாழில் புரவியின் தாண்டவம்; கூரைகள் தகர்ந்து மூவருக்கு நேர்ந்த பரிதாபம்!

யாழில் புரவியின் தாண்டவம்; கூரைகள் தகர்ந்து மூவருக்கு நேர்ந்த பரிதாபம்!

புரவி புயல் தாக்கத்தின் விளைவாக வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியில் வீடுகள் சிலவற்றின் கூரைகள் தகர்ந்ததால் 2 சிறுவர்கள் உள்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

37 குடும்பங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்றிரவு 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்த அனர்த்தத்தில் இரத்தினசாமி சாந்தரூபான் (வயது-30) என்பவர் காயமடைந்து பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பீற்றர் மகிந்தன் (வயது -35) என்பவர் ஊரணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிறுவர்கள் இருவரும் ஊரணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.

ஆசிரியர் - Editor II