கண்களுக்கு மை இட்டுக் கொண்டால் நீங்கள் பேரழகியாக ஜொலிப்பீர்கள்!

கண்களுக்கு மை இட்டுக் கொண்டால் நீங்கள் பேரழகியாக ஜொலிப்பீர்கள்!

கண்களிலிருந்து தான் முதலில் எல்லோருடைய அழகும் வெளிப்படும். அத்தகைய அழகு வாய்ந்த கண்களின் ஆரோக்கியம் மற்றும் அழகை நாம் சரியாக பராமரிக்க வேண்டும். ஒருவரை பார்த்தவுடன் நம் மனதிற்கு பிடிக்க செய்வது கண்கள்தான். ஏனென்றால், கண்களுக்கு பொய் சொல்ல தெரியாது.

‘கண்ணுக்கு மை அழகு’ என்று கவிஞன் சும்மாவா எழுதியிருக்கிறான்? அவன் கூற்று பொய் கிடையாது. பெண்களின் கண்களுக்கு அழகை சேர்க்க முதன்மையான சாதனமாக விளங்குகிறது கண் மை. கண் மை தடவினால், அது கண்களை தனியாக பளிச்சிட்டு காட்டும்.

கருப்பு கண் மை என்பது கண்களுக்கான ஒரு எளிய மேக் அப் ஆகும். சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் இப்படி விதவிதமான ஸ்டைல்களில் கண்ணுக்கு மை தடவி கொண்டால், எளிய முறையிலேயே தினமும் உங்கள் தோற்றத்தை மாற்றிக் கொள்ளலாம்.

பிறந்த குழந்தையே ரோஜாப்பூ போன்று அழகாய் இருக்கும் போது அதை மேலும் அழகுப்படுத்தும் விதமாக கண் மைகளால் அழகுப்படுத்தும் அம் மாக்கள் இந்தியாவில் தான் அதிகம்.

கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு வைட்டமின் ஏ உணவுகளை உட்கொள்வது நல்லது. பால் பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள், ஆரஞ்சு பழங்கள் மற்றும் காய்களை சாப்பிட வேண்டும்.

கண்களில் மை இடும் முறை

  • கண்கள் மூக்கின் மேல் பகுதியில் அமையப் பெற்றிருந்தவர்கள் என்றால் மூக்கின் அருகே அமையுமாறு மைக்கோடுகளை இடலாம்.
  • கண்கள் புருவத்திலிருந்து சற்றே அதிகமாகக் கீழே இருக்கக் கூடியவர்கள், மைக்கோட்டை புருவப் பகுதியில் ஓரளவு தடிப்பாக இழுக்கலாம்.
  • கண்களுக்கு மைத் தீட்டுவது எல்லாப் பெண்களுக்கும் அழகுதான் என்று சொல்ல முடியாது. மை தீட்டாமல் இயல்பாக அழகிய கண்களைக் கொண்டவர்கள் மை தீட்டுவதைத் தவிர்க்கலாம்.
  • மைக்குப் பதிலாக மை பென்சில்களைப் பயன்படுத்தலாம். அவ்வாறு பென்சில்களால் மை தீட்டுவது ஓரளவுக்கு மெல்லியதாகவே வரும்.
  • பெண்கள் மையிட, கண்ட கண்ட குச்சிகளைப் பயன்படுத்தக் கூடாது. இதனால் கண்களுக்குப் பாதிப்பு வரும். குச்சிகள் சிராய்த்து ஏதேனும் சிறு காயங்கள் அல்லது கீறல்கள் ஏற்பட்டு விடும். இதனால் மெல்லிய பிரஷ்களைக் கொண்டு பயன்படுத்துவது சிறந்தது.
ஆசிரியர் - Editor II