பிக்பாஸ் சீசன்4ல் முதலிடம் யாருக்கு தெரியுமா? ரம்யா பாண்டியனையும், பாலாஜியும் ஓரம்கட்டி வியப்பில் ஆழ்த்தும் போட்டியாளர்!

பிக்பாஸ் சீசன்4ல் முதலிடம் யாருக்கு தெரியுமா? ரம்யா பாண்டியனையும், பாலாஜியும் ஓரம்கட்டி வியப்பில் ஆழ்த்தும் போட்டியாளர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக அனுதினமும் ஏதாவது ஒரு சண்டை அரங்கேறி தான் வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை 1 முதல் கடைசி இடம் வரை வரிசைப்படுத்தி, அவர்களுக்குள்ளே மோதிக்கொள்ளும் சம்பவம் நிகழ்ந்தது.

அதைப்போல் கடந்த இரண்டு வாரங்களாக நடந்த கால் சென்டர் டாஸ்கின் அடிப்படையில் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களை ஒன்றிலிருந்து வரிசைப்படுத்த வேண்டும் என்று இரண்டாவது முறையாக ஒரே யுத்தியை கையில் எடுத்துள்ளார் பிக் பாஸ்.

இதனால் மறுபடியும் யாருக்கு முதலிடம், யாருக்கு கடைசி இடம் என்று தங்களுக்குள்ளே குடுமிபிடி சண்டையை தொடங்கியுள்ளனர் பிக் பாஸ் போட்டியாளர்கள்.

ஏனென்றால் போன முறை, இதே போன்று நடந்த டாஸ்கில் ரம்யா பாண்டியன் தான் முதல் முதலிடத்தைப் பிடித்து, அவரே இந்த சீசனில் வெற்றியாளர் ஆக்குவதற்கு தகுதியானவர் என்ற பெயரை பெற்றார்.

எனவே  தற்போது இரண்டாவது முறையாக நடக்கப்போகும் இந்த டாஸ்கில், ரியோவை வெளுத்து வாங்கிய ‘அனிதா சம்பத்’ முதலிடத்திலும்,

ஆரியை கேள்விகளால் சிக்கவைத்த பாலாஜி இரண்டாவது இடத்தையும், ஜித்தன் ரமேஷ் திணறடித்த ‘ரம்யா பாண்டியன்’ மூன்றாவது இடத்திலும் அடுத்தடுத்த இடத்தை மற்றும் போட்டியாளர்கள் பிடித்துள்ளதாக தெரிகிறது.

மேலும் யாருக்கு எந்த இடம் என்பதை இன்று ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெளிவாக தெரிந்துவிடும்.

ஆசிரியர் - Editor II