காதுல ரத்தம் வர்ற வரைக்கும் ரியோவை கிழிச்சு தொங்கவிட்ட அனிதா சம்பத்! இது வேற லெவலா இருக்கே?

காதுல ரத்தம் வர்ற வரைக்கும் ரியோவை கிழிச்சு தொங்கவிட்ட அனிதா சம்பத்! இது வேற லெவலா இருக்கே?

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் தற்போது புது புது யுக்திகளை கையாண்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

ஏனென்றால் சென்ற வாரம் புத்திசாலித்தனமாக விளையாடி சம்யுக்தாவை பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகும்படி செய்தார். அதே போன்றே, தற்போது அனிதா ரியோவை நேற்றைய கால் சென்டர் டாஸ்கின் மூலம் சரமாரியாக கேள்விகளை கேட்டு திணறடித்துள்ளார்.

ஏனென்றால் ‘இந்த பிக்பாஸ் வீட்டில் நீங்கள் வெற்றியாளராக மாறுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்குது?’, ‘ஹீரோ என்கிற இமேஜ் ஓட வந்துட்டு, அப்படியே போய் விடலாம்னு பாக்கறீங்களா?’

தேவையில்லாத ஆணி புடுங்குற வேல அது எதுக்கு?’ என்றெல்லாம் விஷப்பூச்சி அனிதாவின் வில்லங்கமான கேள்வியில் சிக்கி சின்னாபின்னமா ஆயிட்டாரு ரியோ.

எனவே அனிதாவின் இந்த மிரட்டலான அணுகுமுறையை பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிக்பாஸ் போட்டியாளர்களுமே வாயடைத்துப் போனார்கள்.

மேலும் அனிதாவின் இத்தகைய வித்யாசமான செயலால், கூடுதல் சுவாரசியம் பிக்பாஸ் நிகழ்ச்சி கிடைப்பதால், ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அனிதாவை பாராட்டி வருகின்றனர்.

ஆசிரியர் - Editor II