கார் மீது மணல் லொறி கவிழ்ந்ததில் எட்டுப் பேர் பரிதாப பலி!

கார் மீது மணல் லொறி கவிழ்ந்ததில் எட்டுப் பேர் பரிதாப பலி!

உத்தரபிரதேசத்தில் வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மணல் லொறி கவீழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து நேற்றிரவு உத்தரபிரேசின் கெளசாம்பி பகுதியில் உள்ள சாலையொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள திருமண விழாவில் கலந்து கொண்டு திரும்பி வந்த உள்ளூர்வாசிகள் என கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன், மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

விபத்து குறித்த ஆரம்ப அறிக்கையின்படி லொறியின் டயர் ஒன்று வெடித்ததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து லொறி கவிழ்ந்தாக கூறப்படுகிற நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் - Editor II