நாட்டிலிருந்து விலகி செல்லும் புரெவி சூறாவளி

நாட்டிலிருந்து விலகி செல்லும் புரெவி சூறாவளி

புரெவி சூறாவளி தாக்கத்தால் யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 707 குடும்பங்களை சேர்ந்த 45 ஆயிரத்து 318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 34 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்து 167 குடும்பங்களை சேர்ந்த மூவாயிரத்து 927 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் 42 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 963 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புரெவி சூறாவளி காரணமாக 6 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

44 ஆயிரத்து 848 பேர் இந்த சூறாவளியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 50 வீடுகள் முழுமையாகவம் 2 ஆயிரத்து 148 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

புரெவி சூறாவளி நாட்டிலிருந்து விலகி செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது,

அத்துடன் சில பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II