கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டும்- சரத்வீரசேகர

கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டும்- சரத்வீரசேகர

2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடித்த அடுத்த கணமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அமைச்சர் சரத்வீரசேகர தெரித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் குரலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என கூறினார்.

உலகத்திற்கே அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாத அமைப்பை தோற்கடித்த பின்னர் அவர்களின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஹிட்லரின் தோல்விக்குப் பின்னர் நாஜி கட்சி நிறுத்தப்பட்டது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறிவிட்டதாக குறிப்பிட்டார்.

இதன் காரணமாகவே உலகின் மிக ஆபத்தான பயங்கரவாத அமைப்பின் அரசியல் குரலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் இயங்குகின்றது என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்வதற்கு முன்னதாக பிரபாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் - Editor II