லொஸ்லியா தந்தையின் இறுதிச்சடங்கு அன்புவழிபுரத்தில்!

லொஸ்லியா தந்தையின் இறுதிச்சடங்கு அன்புவழிபுரத்தில்!

பிக்பொஸ் புகழ் லொஸ்லியா மரியநேசன், தற்போது கொழும்பிலுள்ள விடுதியொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது தந்தையின் இறுதிச்சடங்கிற்காக இலங்கை வந்த நிலையிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் (52) மாரடைப்பு காரணமாக கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் திகதி கனடாவில் உயிரிழந்தார்.

லொஸ்லியாவின் தந்தையின் சடலம் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதால், இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள, இந்தியாவிலிருந்து விமானம் மூலம் லொஸ்லியாவும் இலங்கை வந்துள்ளார்.

மரியநேசனின் உடலை இலங்கை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் வெளியுறவு அமைச்சின் கண்கானிப்பின் கீழ் நடைபெற்று வருவதாக லொஸ்லியாவின் சித்தப்பா தெரிவித்துள்ளார்.

சடலம் இலங்கைக்கு கொண்டு வரும் பட்சத்தில் திருகோணமலை அன்புவழிபுரம் பகுதியில் உள்ள அவர்களின் இல்லத்தில் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும், அடுத்த வாரமளவில் லொஸ்லியாவின் தந்தையின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்ப்பதாகவும் லொஸ்லியாவின் சித்தப்பா தெரிவித்தார்.

கடந்த 22 ஆம் திகதி இலங்கைக்கு வந்த லொஸ்லியா கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 6ஆம் திகதி அவர் திருகோணமலை வருவார் என்றும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தினை பூர்வீகமாக கொண்ட மரியநேசன், ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பின் உறுப்பினராக செயற்பட்டார். ஈ.என்.டி.எல் அமைப்பினர் கிளிநொச்சியிலிருந்து வெளியேறி திருகோணமலையில் மையம் கொண்டபோது, மரியநேசனும் அங்கு சென்று குடியேறினார். பின்னர் 2009 ஆம் ஆண்டு தொழில் வாய்ப்பு தேடி கனடாவுக்கு சென்றார்.

ஆசிரியர் - Editor II