இணையத்தில் வெளியான பிக்பாஸ் போட்டியாளர்களின் ரேங்கிங் லிஸ்ட்.. முதல்ல இருப்பது யார் தெரியுமா?

இணையத்தில் வெளியான பிக்பாஸ் போட்டியாளர்களின் ரேங்கிங் லிஸ்ட்.. முதல்ல இருப்பது யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் தன்னுடைய சுவாரஸ்யத்தை அதிகரித்து, பிக்பாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் இப்போது பட்டி தொட்டி எங்கும் பிக்பாஸ் பேச்சுதான். அந்த அளவுக்கு தமிழக மக்களிடையே பிரபலமாகி இருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களின் டாஸ்க் அடிப்படையிலான ரேங்கிங் லிஸ்ட் ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது நேற்று முந்தினம் பிக்பாஸ் வீட்டில் உள்ள  போட்டியாளர்களை கால்சென்டர் டாஸ்க்கில், அவர்கள் செய்த பெர்ஃபார்மென்ஸின் அடிப்படையில் 1 முதல் 13 வரை  வரிசையாக நிற்க சொன்னார் பிக்பாஸ். இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் பெரிய குடுமிப்பிடி சண்டையே நடந்தது.

ஏனென்றால், முதல் 5 இடங்களை பிடிப்பதற்காக பலர் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். இதனால் கடுப்பான பிக் பாஸ் டாஸ்க் முடிவடைவதற்கு முன்பே பஜரை அடித்து விட்டார்.

தற்போது இந்த டாஸ்கை முடித்து வைக்கும் வகையில் இணையத்தில் நெட்டிசன்கள் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களை, அவர்கள் செய்த டாஸ்கின் அடிப்படையில் வரிசைப்படுத்தி லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


இந்த லிஸ்டில் முதலிடம் பிடித்தாலும் வெளியேறுவதில் அனிதா மற்றும் அஜித் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த லிஸ்ட் பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது.

ஆசிரியர் - Editor II