ஒரே சீரியலில் விஜய் டிவியை துவம்சம் செய்த சன் டிவி.. அப்ப பிக் பாஸ்லாம் சும்மா தானா!

ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனங்களும் தங்களது சேனலை நோக்கி மக்களை ஈர்ப்பதற்காகவே புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
அந்த வகையில் அவர்கள் பயன்படுத்தும் மிகப்பெரிய பிரம்மாஸ்திரம் தான் சீரியல்கள். எனவேதான் அவ்வப்போது புதுப்புது கதைகளை உருவாக்கி தரமான பல சீரியல்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
மேலும் ஒவ்வொரு வார இறுதியிலும் எந்த சீரியல் முன்னிலையில் இருக்கிறது என்பதை பற்றிய விவரங்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன. அந்தவகையில் இந்த வாரம் எந்தெந்த சேனல்கள், எந்தெந்த இடங்களை பிடித்திருக்கிறது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் இந்த வாரம் முன்னிலையில் இருந்த சீரியல்களின் லிஸ்ட் இதோ:
- ரோஜா – சன் டிவி
- ஜில்லா – சன் டிவி
- பாரதிகண்ணம்மா – விஜய் டிவி
- பாண்டியன் ஸ்டோர்ஸ் – விஜய் டிவி
- அபியும் நானும் – சன் டிவி
இந்த லிஸ்டின் படி, கடந்த வாரம் போலவே இந்த வாரமும் ரோஜா சீரியல் முன்னிலை வகித்துள்ளது.
என்னதான் புதுசு புதுசா பல சீரியல்கள் பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பபட்டாலும், இன்றுவரை சன் டிவி சீரியல்களை எந்த சேனலாலும் அடித்துக் கொள்ள முடியவில்லை.
அதுமட்டுமல்லாமல் இந்த பட்டியலின்படி, பல தமிழக மக்களின் மனம் கவர்ந்த தொடர் ரோஜா தான் என்பது தெளிவாக தெரிகிறது.