கூட இருந்தே குழி பறிக்கும் அர்ச்சனா அண்ட் கோ.. பிக் பாஸ் வீட்டில் கிழியும் முகத்திரைகள்!

கூட இருந்தே குழி பறிக்கும் அர்ச்சனா அண்ட் கோ.. பிக் பாஸ் வீட்டில் கிழியும் முகத்திரைகள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆண்டவனுடைய விறுவிறுப்பை கூட்டி கொண்டே செல்கிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 60 நாட்களுக்கு மேலானதால் பலருக்கும் டைட்டில் வின்னராக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி காணப்படுகிறது.

இதற்காக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள். அந்த வகையில் தற்போது நிஷாவை பற்றி அர்ச்சனா அண்ட் கோ புறணி பேசியிருக்கும் விஷயம் பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாள் முதலே நகமும் சதையுமாக இருந்து வருபவர்கள் தான் அர்ச்சனா அண்ட் கோ டீம்.இதுவரை எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்ததே இல்லை. இவ்வாறு இருக்க தற்போது கார்டன் ஏரியாவில் அர்ச்சனா, ரியோ, ஜித்தன் ரமேஷ், சோம் சேகர் ஆகியோர் இணைந்து நிஷாவை பற்றி புறணி பேசியுள்ளனர்.


அதுமட்டுமல்லாமல் அர்ச்சனா, ‘நிஷாவுக்கு ஏதாச்சும் புரியுதா? இல்லையா? ஏன் இப்படி நடந்துகிரா எல்லா இடத்திலேயும் காமெடி சென்ஸ் ஒத்துவராது?’ என்று கூறியுள்ளார்.

அதற்கு நிஷாவின் தம்பியான ரியோ ராஜும் ஒத்து ஊதுகிறார். எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிப்பதற்காக, கூட இருப்பவரையும் முதுகில் குத்தி இருக்கும் அர்ச்சனா அண்ட் கோ-வை நெட்டிசன்கலும் பிக்பாஸ் ரசிகர்களும் நார் நாராய் கிழித்து தொங்க விடுகின்றனர்.

ஆசிரியர் - Editor II