துன்னாலை இந்திரன் அம்மன் ஆலய திருவிழாவை நடத்த விடமாட்டோம் அதையும் மீறி நடத்தினால் இரத்த ஆறு ஓடும்.-- சில விசமிகள் மிரட்டல்.

துன்னாலை இந்திரன் அம்மன் ஆலய திருவிழாவை நடத்த விடமாட்டோம் அதையும் மீறி நடத்தினால் இரத்த ஆறு ஓடும்.-- சில விசமிகள் மிரட்டல்.

யாழ்.வடமராட்சி துன்னாலை இந்திரன் அம்மன் ஆலய திருவிழாவை இந்த முறை நடத்த விடமாட்டோம் அதையும் மீறி நடத்தினால் இரத்த ஆறு ஓடும் என்று ஒரு சில விசமிகள் ஆலய குருக்களை மிரட்டி வருகின்றனர் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆலயத்துக்கு சொந்தமான காணியில் உள்ள அந்தியேட்டி கிரியைகள் செய்யும் மடத்தில் இரவு பகல் என்று பாராமல் ஆலய சூழலில் உள்ள இளைஞர்கள் மது அருந்திவிட்டு ஆலயத்துக்கு வழிபட வருபவர்கள் மீது தகராறு செய்வதோடு அடிக்கடி ஆலய குருக்கள் வீட்டுக்குச் சென்று மெரட்டியும் வருகின்றனர். அத்துடன் ஆலய கேணியில் மது போத்தல்களையும் வீசிவிட்டுச் செல்கின்றனர்.

பரம்பரை பரம்பரையாக  இந்திரராஜகுரு குருக்கள் குடும்பம் பூசை செய்து வந்த நிலையில் இந்த ஆலயத்தில் நிர்வாகத் தெரிவை மேற்கொள்ள எவரும் விரும்பவில்லை. ஆலய காணி மண்டபத்தில் மது அருந்தவிடவில்லை என்ற காரணமாக எழுந்த பிரச்சினை இப்பொழுது நிர்வாகத் தெரிவை மேற்கொள்ளுமாறு கோரி வருகின்றனர். 

ஆலய குருக்களும் அதற்கு இணங்கி கிராமசேவகர் ஊடாக திருவிழா உபயகாரர்கள் என்ன சொல்லுகிறார்கள் அதற்கேற்ப தான் செய்வதாகச் சொல்லியிருக்கிறார். திருவிழா உபயகாரர்கள் நிர்வாகம் அமைக்க விரும்பவில்லை.  அதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள். 

இதனால் ஆத்திரமடைந்த விசமிகள் திருவிழா செய்பவர்கள் என்ன சொல்வது நாங்கள் சொல்வதுதான் நடைமுறை என்று சொல்லி திருவிழா இடம்பெற்று சுவாமி வெளிவீதி வருமாக இருந்தால் இரத்த ஆறு ஓடும் என்றும் குருக்களை மிரட்டினர். இதனால் குருக்கள் பயத்தில் உறைந்து போய் இருக்கிறார். 

இது இவ்வாறு இருக்க இந்த விசமிகளின் செயற்பாட்டை கட்டுப்படுத்தினால் தான் ஆலயத்துக்கு பக்தர்கள் பயமின்றி வந்து செல்வார்கள் என்றும் ஆலய சூழலும் சுத்தமாக இருக்கும் என்றும்  கவலை தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர் - Sellakumar