புயல் பாதிப்பு குறித்து ஆராய மத்திய குழு இன்று தமிழகம் வருகை!

புயல் பாதிப்பு குறித்து ஆராய மத்திய குழு இன்று தமிழகம் வருகை!

புயல் மழையால் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழுவானது சனிக்கிழமை சென்னை வருகிறது.

இந்தக் குழு இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது.

தமிழகத்தில் நிவா், புரெவி உள்ளிட்ட புயல்கள் தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் என ஒட்டுமொத்த மாநிலத்திலும் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பிலான பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், கால்நடைகளும் பலியாகியுள்ளன.

புயல் உள்ளிட்ட பருவ மழையால் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழுவானது சனிக்கிழமை சென்னை வரவுள்ளது.மத்திய அரசுத் துறைகளைச் சோ்ந்த ஏழு அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

மேலும், இந்தக் குழுவானது இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது. ஒரு குழுவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடியும், மற்றொரு குழுவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் மணிவாசனும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஆசிரியர் - Editor II