உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.? ஆஸ்திரேலியாவை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்!

உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.? ஆஸ்திரேலியாவை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று கான்பரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 161 ரன்களை குவித்தது. தொடக்க வீரர் ராகுல் 51 ரன்களையும், இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தும் அசத்தினர்.

பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 150 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் விளையாடிய ஜடேஜா அதிரடியாக விளையாடி கொண்டிருந்த போது அவரது தலையில் பந்து பலமாக தாக்கியது, இதன் காரணமாக அவர் நேற்று பீல்டிங் செய்ய வரவில்லை.

அவருக்கு மூளை அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்ற முன்னெச்சரிக்கை விதிமுறை (கன்கஷன்) மூலம் அவருக்கு மாற்று வீரராக நேற்றைய போட்டியில் சாஹல் இரண்டாவது பாதியில் களம் இறக்கப்பட்டார்.

சாஹல் இறங்குவதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் அவர் இறங்கக்கூடாது என்று வாக்குவாதம் செய்தனர். ஆனால் ஐசிசியின் கன்கஷன் விதிமுறையின்படி ஜடேஜாவிற்கு பதில் சாஹல் களமிறங்கினார்.

இதற்கு முன்னதாக ஆஷஸ் தொடரின் போது ஸ்டீவ் ஸ்மித் பவுன்சர் பந்து தலையில் அடி வாங்கி கண்கஷன் மூலமாக வெளியேறிய போது அவருக்கு பதிலாக மார்னஸ் களமிறங்கி விளையாடினார். முதலில் இந்த விதியை பயன்படுத்திய ஆஸ்திரேலியாவே இப்படி நடந்து கொள்வது சர்ச்சையாகி உள்ளது.


ஆசிரியர் - Editor II