யாழ்.மானிப்பாய் அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது திருசெரூபங்கள் விழுந்து உடைந்ததால் மக்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.

யாழ்.மானிப்பாய் அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது திருசெரூபங்கள் விழுந்து உடைந்ததால் மக்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.
யாழ்.மானிப்பாய் அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது அந்தோனியார் மற்றும் குழந்தை இயேசுவின் திருசெரூபங்கள் விழுந்து உடைந்துள்ளன. 

குறித்த சம்பவத்தால் தேவாலயத்தில் கூடி இருந்த மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததுடன் சோகமாக காணப்பட்டனர். 

அந்தோனியார் தேவாலய தேர் பவனி நேற்றைய தினம் (17) மாலை இடம்பெற்றது. அதன் போது தேரில் அந்தோனியார் மற்றும் , குழந்தை இயேசுவின் திருசொரூபங்கள் எடுத்து வரப்பட்டன. 

தேர் தேவாலயத்தினை சுற்றி மீண்டும் தேவாலய முன் பகுதிக்கு வந்த வேளை அப்பகுதியில் இருந்த பள்ளமான பகுதிக்குள் தேர் சில்லு இறங்கியமையால் தேர் சரிந்தது. அதன் போது தேரில் எடுத்து வரப்பட்ட திருசொரூபங்கள் கீழே விழுந்த போது , அவையின் தலைப் பகுதிகள் சேதமடைந்துள்ளன. 

அதன் பின்னர் உடனடியாக திருசொரூபங்கள் தேவாலயத்தினுள் எடுத்து செல்லப்பட்டு , இன்னுமொரு திருசொரூபம் எடுத்து வரப்பட்டு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. 

தேவாலய பெருநாளின் போது திருசொரூபங்கள் விழுந்து சேதமடைந்தமை பக்தர்கள் மத்தியில் கடும் சோகத்தினை ஏற்படுத்தி இருந்தது. 
ஆசிரியர் - Sellakumar