மல்லாகத்தில் இளைஞர் ஒருவரை சுட்டுப் படுகொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது.-- ரொஷான் பெர்னாண்டோ தெரிவிப்பு.

மல்லாகத்தில் இளைஞர் ஒருவரை சுட்டுப் படுகொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது.-- ரொஷான் பெர்னாண்டோ தெரிவிப்பு.
யாழ்.மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவரை சுட்டுப் படுகொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , 

மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் முடிவிலேயே சம்பவம் தொடர்பில் கூற முடியும். 

விசாரணைகளின் முடிவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார். 


-- 

ஆசிரியர் - Sellakumar