யாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.

யாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.
யாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றிக்கொண்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். 

இச் சம்பவம் அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து கடற்படை தீ அணைக்கும் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காலை தொடக்கம் முயற்சி செய்து வருகின்றனர்.

நீரினை  பீச்சி அடித்தாலும் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் கப்பலின் இயந்திரப் பகுதி  கடுமையாக தீ பற்றி கொண்டுள்ளது. அங்குள்ள டீசல் தாங்கி Gas என்பன உள்ளதால்  தீ தொடர்ந்து எரிகிறது. இதனால் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிமெந்தை ஏற்றிவர பயன்படுத்திய தனியார் ஒருவருடைய  கப்பலாகும்.  இந்தக் கப்பல் திருத்த வேலை காரணமா ஒரு வருட காலமாக நங்கூரம் இடப்பட்டு கடலில் தரித்து நின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

-- 

ஆசிரியர் - Sellakumar