இல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.

இல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.

இல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறுவர்களைப் பாதுகாப்போம்' தேசிய வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாநாடு இன்று (18) நடைபெற்றது. இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றிய ஜனாதிபதி, 

அனைத்து சிறார்களுக்கும், பாதுகாப்பு, சுகாதார வசதி, கல்வி உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் இலக்கு என்று குறிப்பிட்டார்.

தற்போது கல்வி அறிவு குறைந்த பெற்றோரினால் தாங்கள் கூறுகின்ற விடயங்களை பின்பற்றாத சிறார்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படும் நிலைமை அதிகரித்துள்ளது. பாடசாலைகளிலும் சில ஆசிரியர்கள் அதிக தண்டனை வழங்கும் நிலைமை நிலவுகிறது.

சிறார்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிலும் சிறார்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக சில  ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளன. இவ்வாறான நிலையில் சிறார்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்புக்கும் இருக்கிறது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

ஆசிரியர் - Sellakumar