யாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து பொலிஸாரால் தேடப்பட்ட 40 பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து பொலிஸாரால் தேடப்பட்ட 40 பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து பொலிசாரால் தேடப்பட்டு வந்த 40 பேரில் இருவர் நேற்றைய தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குழு மோதலை அடுத்து , மோதலை தவிர்க்கச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் குழு மோதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் இளைஞன் உயிரிழந்ததை அடுத்து குழப்பங்களில் ஈடுபட்டவர்கள் என 40 பேரை கைது செய்வதற்கு இலக்கு வைத்து தேடுதல்களை அன்றைய தினம் ஞாயிற்றுகிழமை இரவு முதல் பொலிசார் மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

அதேநேரம் குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 2 இளைஞர்களும் பொலிஸ் காவலில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். 

இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய் கிழமை இரவு மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் இரு இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வரும் பொலிசார் , அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆசிரியர் - Sellakumar