ஆவாகுழுவைச் சேர்ந்த இருவரை துரத்திய போது அவர்கள் விபத்துக்குள்ளான போதும் தப்பிச் சென்றனர். -- பொலிஸார் தெரிவிப்பு.

ஆவாகுழுவைச் சேர்ந்த இருவரை துரத்திய போது அவர்கள் விபத்துக்குள்ளான போதும் தப்பிச் சென்றனர். -- பொலிஸார் தெரிவிப்பு.
ஆவாகுழுவைச் சேர்ந்த இருவரை கைது செய்வதற்காக தாம் துரத்தியதாகவும்,அதன் போது அவர்கள் விபத்துக்குள்ளான நிலையில் தப்பிச் சென்றுள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது , 

யாழ்.சுன்னாகம் பகுதியில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை கொக்குவில் சந்திக்கு அருகில் பொலிசார் மறிக்க முற்பட்ட போது , மோட்டார் சைக்கிளை நிறுத்தாது மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் தப்பிச் சென்றுள்ளனர். 

தப்பிச் சென்ற இருவரையும் பொலிசார் துரத்திச் சென்றவேளை யாழில் இருந்து கொக்குவிலை நோக்கி வந்து கொண்டிருந்த காருடன் கொக்குவில் சந்தியில் மோதி இளைஞர்கள் இருவரும் விபத்துக்குள்ளானார்கள். 

குறித்த இளைஞர்கள் இருவரும் விபத்துக்குள்ளானதை அடுத்து சம்பவ இடத்தில் மோட்டார் சைக்கிளை கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாண பொலிசார் , விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஆவா குழுவினருடையது எனவும் , தப்பிச் சென்ற இருவரும் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தனர். 
ஆசிரியர் - Sellakumar