கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுக்கு நஷ்ட ஈடு வழங்கும் திட்டத்தை அறிவித்த சமஷ்டி அரசு!

கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுக்கு நஷ்ட ஈடு வழங்கும் திட்டத்தை அறிவித்த சமஷ்டி அரசு!

கனடாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் எவரேனும் தடுப்பூசியின் மிக மிக அரிதான பக்க விளைவுகளால் பாதிக்கப்படுமிடத்து அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் திட்டத்தை சமஷ்டி அரசு உடனடியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கனடாவில் அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜேர்மனியின் பயோஎன்ரெக் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகிய “பைசர் – பயோஎன்ரெக்” தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

கனெடிய மாகாணங்களில் வரும் நாட்களில் நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவுள்ளது.

ஆசிரியர் - Editor II