இந்த பழங்களை சாப்பிடுகிறீர்களா? உங்களை கடும் ஆபத்து நெருங்குகிறது!

இந்த பழங்களை சாப்பிடுகிறீர்களா? உங்களை கடும் ஆபத்து நெருங்குகிறது!

கடந்த சில ஆண்டுகளாக விதை இல்லாத பழங்கள் சந்தையில் அதிகரித்து விட்டதால் உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கு ஏகப்பட்ட பாதிப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

விதையில்லா பழங்கள் எனும் முறை இயற்கை சுழற்சியையே கேள்விக்குறியாக்குகிறது. பல மரங்கள் பறவைகள் விதைகளைப் பரப்பியதன் மூலம் முளைத்தவை.ஆனால் விதையில்லா பழங்களால் அப்படி ஒரு வாய்ப்பு இல்லாமல் ஆகி விடுகிறது.

ஆளி விதைகள் சாப்பிடுவது இதய நலத்திற்கு நல்லது எனக் கூறுவார்கள். அதேபோல பன்னீர் திராட்சைகளை விதைகளுடன் சாப்பிடுவதால் புற்றுநோயைக் குணமாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதை பல கடைகளில் பல ஆயிரம் ரூபாய்க்கு இந்த விதைகளை விற்கிறார்கள்.

விதையில்லா பழங்களை குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவதாகச் சொல்கிறார்கள். அதற்கு ஒரே காரணம், அதன் அதிகளவில் உள்ள இனிப்பு சுவைதான். ஆனால், அவை முழு ஆரோக்கியத்தை நம் குழந்தைகளுக்குக் கொடுப்பதில்லை என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அதில் சத்து இல்லை என்பதால், பணம் விரயமாகிறது. அதேபோல விதையில்லா பழங்கள் சீக்கிரம் போகாமல் இருக்க, ரசாயனம் கலக்கப்படுகிறது. அதைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையில்லாத நோய்கள் வரவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இயற்கையின் படைப்பே விதைகளோடு இருக்கும் பழங்களே, அதைத் தவிர்த்து செயற்கையாய் உருவாக்கப்படும் விதையில்லா பழங்களைத் தவிர்த்து உடல்நிலையையும் சுற்றுசூழலைக் காக்க உதவுவோம்.

ஆசிரியர் - Editor II