கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,845பேர் பாதிப்பு; 172 பேர் பலி

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,845பேர் பாதிப்பு; 172 பேர் பலி

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறாயிரத்து 845பேர் பாதிக்கப்பட்டதோடு 172பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக ஐந்து இலட்சத்து 28ஆயிரத்து 354பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14 ஆயிரத்து 597பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 75ஆயிரத்து 305பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 715பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் - Editor II