லண்டனில் இருந்து ஜேர்மனிக்கு வந்த பெண்ணுக்கு புதிய வகை கொரோனா வைரஸ்!

லண்டனில் இருந்து ஜேர்மனிக்கு வந்த பெண்ணுக்கு புதிய வகை கொரோனா வைரஸ்!

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் இருந்து ஜேர்மனிக்கு வந்த பெண்ணிற்கு புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தீநுண்மியின் என்ற புதிய ரக கொரோனா வைரஸ் அண்மையில் பிரித்தானியாவில் கண்டறியப்பட்டது. அந்தப் புதிய ரகத் தீநுண்மி, முன்பை விட அதிக வேகத்தில் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் உடனான விமானப் போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகத் தடை விதித்தன.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனிலிருந்து ஜேர்மனி நாட்டின் பிராங்பேர்ட் விமான நிலையத்திற்கு வந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா புதிய ரக வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் புதிய ரக கொரோனா வைரஸ் தொற்றின் முதல் பாதிப்பு ஜேர்மனியில் பதிவாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் - Editor II