அமெரிக்காவில் ஐபோன்கள் தொடர்பில் வெளியான தகவல்..!!

அமெரிக்காவில் ஐபோன்கள் தொடர்பில் வெளியான தகவல்..!!

தற்போது உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான மவுசு வெகுவாக அதிகரித்து வருகின்றது.

பாதுகாப்பு கூடியது மற்றும் விலையுயர்ந்தவை என்பதே இதற்கான காரணங்களாகும்.

எனினும் சாம்சுங் நிறுவனத்தின் ஸ்மார்ட் கைப்பேசிகளும் ஐபோனுக்கு நிகராக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இப்படியிருக்கையில் அமெரிக்க கைப்பேசி பிரியர்களை வெகுவாக கவர்ந்த கைப்பேசிகள் எவை என்பது தொடர்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் முடிவுகளின்படி தற்போதும் ஐபோன்களே முதலிடத்தில் உள்ளன.

கடந்த சில வருடங்களாக அங்கு ஐபோன் பாவனை அதிகரித்துள்ளது.

எனினும் இவ் அதிகரிப்பானது சற்றும் வீழ்ச்சியடையாது வீறுநடை போட்டு வருகின்றது.

கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் பலர் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை கொள்வனவு செய்துள்ளனர்.

இவற்றில் அதிகமானவை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II